அன்னூர்: குமரன்குன்று கோவிலில், கந்த சஷ்டி விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 61ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை 9:30 மணிக்கு, வள்ளி தெய்வானை, சமேதர கல்யாண சுப்ரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும், நாளையும், காலை 9:30 மணிக்கு, அபிஷேக பூஜை நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9:30 மணிக்கு நாம ஜெபம் நடக்கிறது. மாலை 3:30 மணிக்கு கிரிவலம் வருதலும், சூரசம்ஹார விழாவும் நடக்கிறது, இரவு துவங்கி, மறுநாள் காலை வரை குமரன் குன்று குழுவின் பஜனை நடக்கிறது. 31ம் தேதி காலை 8:00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.