காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாச தீபம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 10:10
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் (தெலுங்கு) கார்த்திகை மாதம் மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகாலை முதல் இரவு வரை கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு கூறுகையில் கார்த்திகை மாதத்தில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு இருப்பதாகவும் கோயிலுக்குள் கார்த்திகை தீபங்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கோயிலின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் (கோயில் வெளியில்)மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே தீபங்களை ஏற்றுவதற்கு கோயிலின் மூன்றாம் கோபுரம் அருகில் உள்ள நாகாலம்மன் புற்று அருகில் தீபங்களை ஏற்றவும் இதே போல் பிக்ஷால காலிகோபுரம் கோயில் நுழைவாயில் மற்றும் இரண்டாவது கோபுரம் முன்பு பக்தர்கள் தீபங்களை ஏற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். நாளை சனிக்கிழமை 29 10 2022 அன்று நாகச் சதுர்த்தியை யொட்டி கோயிலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டு இருப்பதாக தெரியப்படுத்தினார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து ஐந்தாம் நாள் வரும் நாகசதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் அதற்கு சாதகமாக கோயில் வளாகத்தில் உள்ள நாக புற்று அருகில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டு இருப்பதாக தெரியப்படுத்தினார் .இந்நிலையில் இன்று கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை என்பதால் கோயில் வளாகத்தில் ஆகாச தீபத்தை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு .தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.