இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கந்த சஷ்டி 4ம் நாள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 09:10
மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதுக்கு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு நான்காம் நாள் பூஜை நடந்தது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.