புவனகிரி: புவனகிரி அருகே மேலமணக்குடி ஸ்ரீசித்திவினாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீஐயப்பன் மற்றும் ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே மேலமணக்குடியில் ஸ்ரீசித்திவினாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீஐயப்பன் மற்றும் ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் கோவில்கள்ளது. இக்கோவில் விழாக்குழுவினர்கள் அமைத்து புரணமைக்கப்பட்டு வந்தனர். இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 29ம் தேதி காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர், புண்ணிஹவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூகளுடன் நிகழ்ச்சித்துவங்கியது. மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்துசாந்தி உள்ளிட்ட பல பூஜைகளும் இரவு 9.00 மணிக்கு அஷ்ட்டபந்தன சமர்பணம் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று 30 ம் தேதி காலை 7.00 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி துவங்கியது. காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால மகா பூர்ணாதஹூதியும், காலை 9.30 மணிக்கு தீபாரதனையுடன் கடம்புறப்பாடு துவங்கியது. காலை 10.00 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.