கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2022 05:10
தஞ்சாவூர், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து நேற்று கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் உச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை ஆதிகும்பேஸ்வரர் கோவில் மண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேதராய் முருகப்பெருமான் எழுந்தளினார். தொடர்ந்து பெண்கள், பக்தர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து முருகப்பெருமான் முன்னிலை வைத்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவமும்,அறுசுவை விருந்தும் நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.