பதிவு செய்த நாள்
31
அக்
2022
09:10
பழநி: பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா அக்.25., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் அக்.,30.,ல் மலைக்கோயிலில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, மாலை கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று (அக்.,31.,ல்) மலைக் கோயிலில் குருக்கள், அமிர்தலிங்கம், செல்வ சுப்ரமணியம் குழுவினர் விநாயகர் பூஜை செய்து யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு, அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10:14 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம், நடைபெற்றது. திருக்கல்யாணம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நடைபெற்றது. மலர் மாலை மாற்றுதல் நடைபெற்றது. திருமண கோலத்தில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தருக்கு திருமண கோலத்துடன் சுவாமி அருள்பாலித்தார். திருக்கல்யாணத்திற்கு பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி பிரசாதமாக மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. அதன்பின் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், கோயில் இணை கமிஷனர் நடராஜன், துணை கமிஷனர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.