பதிவு செய்த நாள்
02
நவ
2022
12:11
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில் பல்வேறு வகையான, 1008 கிலோ பூக்களில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையாம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இங்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அர்ச்சகர்கள் ரோஜா, சம்மந்தி, மல்லிகை, அரளி, பிச்சிப்பூ, தாமரை, சம்பங்கி, தாழம்பூ, மரிக்கொழுந்து, முல்லை என, 17 வகையான, 1008 கிலோ பூக்களால், புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்தனர். இவ்விழாவில் கே.ஜி. டேனிம், கண்ணபிரான் மில்ஸ் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.