கம்பம் பகவதி அம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2022 04:11
கம்பம்: கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மாட்டு வண்டி பந்தயம், மஞ்சள் நீராட்டம், மாவிளக்கு எடுத்தல் என களை கட்டியது.
கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா கா முகுல ஒக்கலிகர் .ச முதாயத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராப்டத்துடன் துவங்கியது. இரவு அம்மன் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து திரளாக பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். கேரள செண்டை மேளம், தப்பு தாளம், வேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை கம்ப மெட்டு ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாலை ஆயிரக்கணக்கில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். நூற்றுக்கணக்கான வண்டிகளில் பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் பங்கேற்ற வண்டி வேடம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.