செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமர்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 11:11
அவிநாசி: அவிநாசி அடுத்த கைகாட்டிப்புதூர் எக்ஸ்டன்சன் வீதியில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த புதனன்று தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து கோபுர விமான கலசம் நிறுவுதல், தீர்த்த குட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதனையடுத்து, இன்று காலை அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா குருத்துவ மிராஸ் சிவக்குமார குருக்கள், நடேச ராஜ்குமார் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், மகா தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.