பகவதியம்மாள்புரத்தில் வெற்றி வேல் முருகனுக்கு ஆராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 01:11
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா நேற்று நடைபெற்றது.
நேற்று தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தளத்தை சென்றடைந்தது. அங்கு உள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் இரவு 7 மணிக்கு முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், வான வேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, வேல்முருகன், குமாரசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.