சிக்கல்: சிக்கல் அருகே கொத்தங்குளத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஊரில் பிறந்த மணவாள மாமுனிகள் அவதரித்த ஸ்தலமாக விளங்குகிறது.
மணவாள மாமுனிகளின் அவதார தினமான ஐப்பசி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு மணவாள மாமுனிகள் சன்னதியில் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புல்லாணியில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.