தஞ்சை ராஜராஜசோழன் சதய விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காது மூடநம்பிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2022 05:11
கமுதி: தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காது மூடநம்பிக்கை காட்டுகிறது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழ் முறைப்படி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் முத்துராமலிங்கத்தேவருக்கு அகில பாரத சன்னியாசிகள் சங்கத் தலைவர் ராமநாதசுவாமி முன்னிலையில் சந்தனம்,பால்,குங்குமம்,திரவிய பொடி உட்பட 32வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்பு அவர் கூறியதாவது, குருபூஜை விழா, சதய விழா போன்றவற்றில் திராவிட இயக்கங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ,தஞ்சையில் நடைபெற்ற ராஜராஜசோழனின் சதய விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காது அவர்களின் மூடநம்பிக்கையை காட்டுகிறது அதனால் தவிர்த்து இருக்கிறார்கள்.ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றும் சிலர் பேசுகின்றார்கள்.இத்தகைய மூடநம்பிக்கையை கைவிட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் என்றும்,தென் இந்தியாவில் முதல் முறையாக தாக்குல் நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் குறித்து இதுவரை தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை.ஜமாத்தார்கள் கோயில் நிர்வாகிகளை சந்தித்தது இதுஎல்லாம் தி.மு.க.,வின் அரசியல் சூழ்ச்சி. ஒருகாலத்தில் அந்த கோயிலில் தேர் ஓடுவதற்கு எதிர்த்து நின்றார்கள்.அதற்கு பின்பு தற்போதைய டி.ஜி.பி., சைலேந்திரபாபு நடவடிக்கை எடுத்து தேர் ஓடுவதற்கு வழிவகை செய்தார். தற்போது வந்துள்ள ஜமாத்தார்கள் அனைவரும் புதியவர்கள் அதனால் நல்லிணக்கத்தை விரும்பி வந்திருந்தால் வரவேற்கிறோம், என்றார். உடன் கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.