திருமங்கலம்: நவ. 8 அன்று மதியம் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நடக்க இருப்பதால், திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும். பின்னர் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.