மதுரை : மதுரையில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நாளை (நவ. 8) காலை 6:00 மணிக்கு ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடக்கிறது.
பக்தர்கள் காலை 9:45 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அபிஷேகத்திற்குரிய பச்சரிசி, காய்கறி, நெய், வெண்ணெய், தேன், நல்லெண்ணெய் வழங்க விரும்புவோர் இன்று (நவ.,7) இரவு 9:00 மணிக்குள் பெயர், நட்சத்திரம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கோயிலுக்கு வந்து தெரிவிக்க வேண்டும். நாளை சந்திர கிரகணம் என்பதால் காலை 9:45 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு 7:00 மணிக்கு திறக்கப்படும்.