Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... கல்லல் நற்கனி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கல்லல் நற்கனி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி குமர கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சீர்காழி குமர கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 நவ
2022
10:11

மயிலாடுதுறை: சீர்காழியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு குமர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்  வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் அசுரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது இருள் வந்து விட்டதால் இந்திரன் அமைத்த கோவிலில் தங்கி மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய  கோவிலில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்   பிரமபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார். குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு அங்கு தானே தங்கியதால் இக்கோயில் குமரக்கோட்டம் என புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற  கோவிலுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்காம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜை இன்று நிறைவடைந்ததையொட்டி காலை 9 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள், சுவிட்சர்லாந்து விஷ்ணு துர்க்கை கோவில் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சரஹணபவ சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கருத்தில் இருந்த புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆடிட்டர் குரு சம்பத்குமார், டாக்டர் முத்துக்குமார்,  இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக நகர பொருளாளர் சங்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக வர்ணனைகளையை பாஜக மாவட்ட  பிரச்சார அணி தலைவர் அழகிரிசாமி, டாக்டர் சரவணன் ஆகியோர் செய்தார். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar