பெ.நா.பாளையம்: இடிகரை வில்லீஸ்வரமுடையார் திருக்கோவிலில் இன்று அன்னாபிஷேக பெருவிழா நடக்கிறது. இடிகரையில் வேதநாயகி அம்பாள் உடனமர் வில்லீஸ்வரமுடையார் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் இன்று மாலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் அன்னாபிஷேக விழா துவங்குகின்றது. மாலை, 5:00 மணிக்கு அன்னாபிஷேகம், அதைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.