கடலூர் : திட்டக்குடி, தொழுதூர், திருவட்டத்துறை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி, திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் லிங்கத்திற்கு அபிஷேகம் முடிந்து, அரிசி சாதத்தை லிங்கத்தில் வைத்து அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து லிங்கத்தின் மீதிருந்த சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.