பதிவு செய்த நாள்
08
நவ
2022
02:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களின் நடை சாத்தப்பட்டன.
சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம். இன்று மதியம் 2:39 மணியிலிருந்து 6:27 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை வதானேஸ்வரர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் கோவில்கள், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், திருமணஞ்சேரி உத்வாக நாத சுவாமி கோவில், குத்தாலம் உத்தவேதீஸ்வரர் கோவில், சீர்காழி சட்டநாதர் கோவில், தாடாலன் பெருமாள் கோவில், தாளபுரீஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர் திவ்ய தேச பெருமாள்கோவில்கள் உள்ளிட்ட கோவில்களின் நடை வழக்கத்தை விட முன்கூட்டியே நடை சாத்தப்பட்டது. 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலின் நடை திறந்திருக்கும் ஆனால் பூஜைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.