செஞ்சி: தேவதானம்பேட்டை திருவாலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்த தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் உள்ள திருவாளீஸ்வரி உடனுரை திருவாலீஸ்வரருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகமும் பகல் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவில் திருவாளீஸ்வரருக்கு நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.