செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி மங்களாம்பிகை உடனுரை ஆலகாலேஸ்வரர் கோவிலில் மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆலகாலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். செஞ்சி சிறுகடம்பூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 5 மணிக்கு காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பெருவளூர் கோகிலாம்பாள் உடனுரை கோட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு கோட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பனமலை அஸ்தளாம்பிகை உடனுரை தாளகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும். தாளகிரிஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், அஸ்தலாம்பிகைக்கு சிறப்பு அலங்காரமும் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.