திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா நவ. 28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2022 04:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ 28 மதியம் 12:15 க்குமேல் 12:30 மணிக்குள் கொடி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நடைபெறும் டிச. 7வரை காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி ஆட்டுக்கிடாய் உள்பட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக டிச 5ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 6 காலையில் தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். டிச. 7ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.