பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோயிலில் பாலாலய விழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் கும்பாபிஷேகத்தின் முன்னோட்டமாக பாலாலய விழா நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் அனுக்கை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தியுடன், யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள் தொடங்கி, இரவு 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. இன்று காலை 7:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கி, கோபூஜை, ஜெபம், ஹோமங்கள் நிறைவடைந்து மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் 9:30 மணிக்கு மேல் தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, சிவாச்சாரியார்கள் அனைத்து விமான படங்களுக்கும் பாலாலய மகா அபிஷேகம் செய்தனர். மேலும் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.