பதிவு செய்த நாள்
11
நவ
2022
06:11
அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி நடக்கிறது. குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரகாரத்தில், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வற்றாத சுனை உள்ளது. இதுவரை ஒரு முறை கூட இந்த சுனை வற்றியது இல்லை. இங்கு புதிதாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, முன் மண்டபமும், கோபுரமும் கட்டி, திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 15ம் தேதி மாலை துவங்குகிறது. 18 ம் தேதி மாலை முதற்கால யாக பூஜையும், 19 ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசம் நிறுவுதலும், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 9:30 மணிக்கு, விநாயகர், கோபுரம், வட்டமலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது, இதையடுத்து, மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் 7:30 மணிக்கு அனுப்பப்பட்டி வள்ளி முருகன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.