மானாமதுரை: மானாமதுரை அருகே கிள்ளுகுடியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த முத்துராஜா தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளம் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிற்பங்கள் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி சிற்பங்கள் என கண்டுபிடித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், பெருமாள் சிற்பமானது மூன்றரை அடி உயரம் கொண்ட தனி கல்லில் செதுக்கப்பட்டுஉள்ளது. தலைப்பகுதி, கைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. கழுத்தில் ஆபரணங்கள்செதுக்கப்பட்டுள்ளது.மார்பில் முப்புரி நூலும் இடையில் இடைக்கச்சை கால்வரையிலும் இடையின் இருபுறமும் ஆடையின் நீட்சிகள் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்ப ஒற்றுமையின் காரணமாக இந்த சிற்பம் ஸ்ரீதேவியின் சிற்பமாக இருக்க வேண்டும் அல்லது பூமாதேவியின் சிற்பமாக இருக்கலாம் என்றும் மற்றும் ஒரு சிற்பம் இந்தப் பகுதியில் புதைந்து இருக்கலாம் என்றும் மேலும் இந்த சிற்பங்களை பார்க்கும் போது இந்த பகுதியில் ஒரு பழமையான பிற்கால பாண்டியரின் பெருமாள் கோவில் இருந்திருக்க வேண்டும் என்றும் கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம் என்று கூறினர்.