பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2022 04:11
திண்டிவனம் : தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அறங்காவலரின் அதிகாரம் பெற் றமுகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.