பதிவு செய்த நாள்
14
நவ
2022
08:11
ஸ்ரீவைகுண்டம்: இரட்டைத் திருப்பதி பெருமாள் கோவிலில், நடந்த கருடசேவையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லிங்கலத்தில் பெருமாள் தேவர்பிரான், செந்தாமரைக்கண்ணன் என்ற ரூபத்தில், இரட்டை திருப்பதியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இரட்டைத் திருப்பதியில் பிரமோற்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை, பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவர்களான தேவர்பிரான், செந்தாமரைக்கண்ணன் பெருமாள்கள், தனித்தனியாக கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதில், ராமானுஜசுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் வலமணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசா அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசன்காத்தபெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், இன்ஜினீயர் சுப்பிரமணியம், உபயதாரர் திருமலை மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவில், வரும் 16ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.