பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
ஈரோடு: ஈரோடு கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.ஈரோடு கோட்டை, பெரியபாவடியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் சில வாரத்துக்கு முன் நிறைவடைந்தததால், கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.ஆக., 26ம் தேதி காலை, 10 மணிக்கு, அம்பிகையிடம் உத்தரவு பெறுதல், விக்னேஸ்வரர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை, 5 மணிக்கு மங்களஇசை, விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாஜனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது.ஆக., 27ம் தேதி காலை, 8 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மங்களஇசை, விஷேச சந்தி, பூதசுத்தி, கோபுரகலசங்கள் வைத்து பூஜித்தல், திரவ்யாகுதி நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விநாயகர், பாலமுருகன், நவக்கிரஹங்கள், ஓங்காளியம்மன் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.மாலை, 5 மணிக்கு ஐந்தாம் கால ஹோம பூஜை, விநாயகர் வழிபாடு, ஐந்தாம் கால ஹோமபூஜை நடந்தது.இன்று அதிகாலை, 5 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, நாடிசந்தானம், ஸ்பர்ஷாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது.தொடர்ந்து, 6 மணி முதல் 7.30க்குள், கோபுரகலசம், ஓங்காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர் அங்கமுத்து, சம்பத்குமார், குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.