குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2022 07:11
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சென்று சங்கீத உற்சவம் இன்று துவங்குகின்றன.
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று மாலை 5:30 மணிக்கு மேல்பத்தூர் கலையரங்கில் தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவைக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் சுரேந்திரனுக்கு இந்த ஆண்டு செம்பை நினைவு விருது நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் சென்னை விக்னேஷ் ஈஸ்வர் குழுவின் துவக்க கச்சேரியில் திருவனந்தபுரம் சுரேந்திரன் மிருதங்கத்திலும் திருவிழா சிவானந்தன் வயலினிலும் ஆலுவா ராஜேஷ் கடத்திலும் பக்கவாத்தியம் வாசிக்கின்றனர்.
15 நாள் உற்சவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக உற்சவத்தையொட்டி நேற்று மாலை 6.30 மணி அளவில் செம்பை வைத்தியநாத பாகவதரின் தம்புரு சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றன. செம்பை வித்யா பீட தலைவர் சுரேஷ், செயலர் கீழத்தூர் முருகனிடம் இருந்து குருவாயூர் தேவஸ்தான தலைவர் விஜயன் தலைமையிலான செம்பை சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. இதையொட்டி நடந்த கூட்டத்தில் கீழத்தூர் முருகன், கரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத், வைக்கம் வேணுகோபால், ஹரி, குருவாயூர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தம்புராவுடன் வாகனம் இன்று குருவாயூருக்கு புறப்படுகிறது. வாகனத்திற்கு காலை பாலக்காடு செம்பை நினைவு சங்கீத கல்லூரியிலும் மதியம் ஒற்றப்பாலம் பூழிக்குன்னு ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலிலும், கேரள கலாமண்டலத்திலும் நடக்கும் வரவேற்ப்பு நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாலை தம்புரு சங்கீத உற்சவ கலையரங்கில் பிரதிஷ்ட்டை செய்யப்படும்.