சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நிர்வாக அலுவலகம் முன்பு தீட்சிதர் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், நேற்று காலை தர்ஷன் என்கிற நடராஜா தீட்சிதர், நடராஜர் கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில்.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்காக இவரும், ஜெயசீலா என்ற பெண்மணியும் சென்றபோது, கோயிலில் பிரச்சனை ஏற்பட்டு, இதன் காரணமாக என்னை, எனது தந்தை கணேஷ் ஆகிய இருவரையும் கோவில் நிர்வாகம் சார்பில் தீட்சிதர்கள் சஸ்பெண்ட் செய்தனர் இதனால் கோவிலில் எனக்கு பணிகள் கொடுக்க வேண்டும், ஒன்பது மாதங்களாக நான் வாழ்வாதாரம் பாதித்து இருந்து வருகிறேன், எனக்கு காவல்துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, போராட்டத்தில் ஈடுபட்டார் இந்த போராட்டத்தில் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட தர்ஷன் மதியம் சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதியிடம் மனு அளித்தார்.