திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2022 12:11
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெறுவதை யொட்டி, உழவாரப் பணி பக்தர்கள் தங்க கொடி மரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை யொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.