பழநி: பழநி கோயில் கிரிகோயிலான வீரதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு பணிக்காக பாலாலயம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட உபகோவிலான வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளது. அதன் துவக்கமாக நேற்று (நவ.,20) காலை வீர துர்க்கை அம்மன் கோயிலில் கணபதி பூஜை, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10:30 மணிக்கு மேல் கோபுர விமானம் பாலாலயம் நடந்தது. அரசமரத்தடியில் அமைந்துள்ள முருகன், வள்ளி, தேவயானை சிலை விக்கிரகங்களுக்கும் பாலாலயம் நடைபெற்றது. இதில் இணை ஆணையர் நடராஜன்,கண்காணிப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.