சித்தி தினம் ஏராளமான பக்தர்கள் அரவிந்தர் அறையை தரிசனம் செய்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2022 02:11
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் 96ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், மகான் அரவிந்தர், 1926 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை, உணர்ந்து அதன்பின் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார். அதையொட்டி, அந்த நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவ.24ம் தேதி சித்தி தினமாக கடைப்படுகிறது. 96ம் ஆண்டு சித்தி தினமான நேற்று, அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரம உறுப்பினர்களின் கூட்டு தியானம் நடந்தது. அதைத்தொடர்ந்து, அரவிந்தர் வாழ்ந்த அறையை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.