ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை காலபைரவர் கோயில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மூலவர் கால பைரவர், மற்றும் பரிகார தெய்வங்களான விநாயகர், முருகன், கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.