பரமக்குடி: பரமக்குடி சிவன் மற்றும் முருகன் கோயில்களில் அருள் பாலிக்கும் பைரவருக்கு சம்பகஷ்டி விழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில், திரிசூலம் ஏந்தி அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. *இதேபோல் பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில், செந்தில் ஆண்டவர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அருள்பாளிக்கும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.