தஞ்சாக்கூரில் உள்ள ஜெயம் பெருமாள், தவக்கோல சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2022 04:11
மானாமதுரை: மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள ஜெயம்பெருமாள்,தவக்கோல சிவன் கோயில்களில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாக்கூர் ஜெயம பெருமாள்,தவக்கோல சிவன்,ஜெகதீஸ்வரர்,பாலசுப்பிரமணியர்,18 சித்தர்கள் ஆகியோர்களுக்கு ஒரே வளாகத்தில் கோயில்கள் கட்டப்பட்டு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு 11 வகையான பொருட்களால் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது.இந்த விழாவில் பா.ஜ. மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.வருஷாபிஷேக விழாவில் தஞ்சாக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலசுப்பிரமணியசாமி, நிர்வாகிகள் சகலகுருநாதன்,சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.