பதிவு செய்த நாள்
30
நவ
2022
04:11
மேட்டுப்பாளையம்,: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவித்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த ஆண்டு ஐயப்பன் கோவிலுக்கு, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அதன் பேரில், 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து, அதை மூட்டைகளில் கட்டினர். இப்பொருட்களை லாரிகளில் ஏற்றி, ஐயப்பன் கோவிலுக்கு அனுப்பும் பணிகளில், சேவா சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியிலிருந்து, பத்தாம் தேதி வரை ஐயப்ப சேவா சங்கத்தினர், சபரிமலை ஐயப்பன் கோவில் சேவைப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இத்தகவலை மேட்டுப்பாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.