பதிவு செய்த நாள்
30
ஆக
2012
10:08
கோவில்களில், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களில், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், அர்ச்சனை பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவதால், அங்கு பிளாஸ்டிக் குப்பை அதிகரிக்கின்றன. இதைத் தடுக்க, கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து கோவில்களிலும், அறிவிப்புப் பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை செயலாளர் ராஜாராம் கூறுகையில், ""கோவில்கள் புனிதமானவை. இங்கு கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பைகள், இந்தச் சூழலைப் பாதிப்பதால், தடை செய்ய முடிவு செய்துள்ளோம், என்றார்.