ஆம்பூர்:ஆம்பூர் அருகே, இரண்டு கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில், திருப்பதி கெங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு அர்ச்சகர் ஜெயபால், 65, கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில், கோவில் வளாகத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை பெயர்த்து மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. கோவிலில் இருந்த கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் உண்டியலை துாக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதே போல கோவில் வளாகத்திற்குள், நாகாத்தம்மனுக்கு தனி கோவில் உள்ளது. இங்குள்ள முன்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், ஒரு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. உம்மராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.