இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவ மையம் முதல்வர் திறந்து வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 04:12
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவ மையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு. க .ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளுக்காக அரசு ரூ 58 கோடிநிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் முதல் உதவி அளிக்கும் வகையில் மருத்துவ மையம் துவக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் ,பக்தர்களை நீண்ட நாளாக வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று நேற்று கோயில் வளாகத்தில் புதிய மருத்துவமையத்தைமுதல்வர் மு .க .ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் சார்பிலும் இருக்கன்குடி பக்தர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புதிய மருத்துவ மையத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா குத்து விளக்கு ஏற்றினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் , கடற்கரை ராஜ் நகராட்சி தலைவர் குருசாமி, கோயில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.