பதிவு செய்த நாள்
03
டிச
2022
04:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா சம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ. சவுந்தர்யா தலைமை வகித்தார். கோயில் துணை கமிஷனர் சுரேஷ், போலீஸ் உதவி கமிஷனர் ரவி, மண்டல தலைவர் சுவேதா, தாசில்தார் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பூமாரி மாரியப்பன், வி.ஏ.ஓ. சத்தியமூர்த்தி சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார், போக்குவரத்து கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள் சுமதி, ரஞ்சனி, கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிரிவலப் பாதை சீரமைப்பு, நடமாடும் கழிப்பறை வசதி, கிருமி நாசினி தெளித்தல், குப்பைத் தொட்டிகள் வைத்தல், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ரத வீதிகளில் வாகனங்களுக்கு தடை, மருத்துவ வசதிகள், கூடுதல் பஸ்கள் இயக்கம், தீயணைப்பு வாகனம், மின்பணிகள், குடிநீர், வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.