திருவண்ணாமலை மஹா தீபம் மை பிரசாதம் ; ஜன., 6ல் பக்தர்களுக்கு வினியோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 04:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் மை பிரசாதம் வரும், ஜன., 6 முதல் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஏற்றப்பட்ட மஹா தீபம், 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இதை தொடர்ந்து தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் தீப மை, கோவிலிற்கு கொண்டு வரப்பட்டு, வரும், ஜன., 6ல் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவகாமி சமேத நடராஜருக்கு சாத்தப்படும். பின்னர், மஹா தீப நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் பிரசாதம், 10 ரூபாய் எனவும் வினியோகம் செய்யப்படும்.