கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப் பகுதியில் கார்த்திகை தீபத்திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அபிஷேக ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக வில்பட்டி வெற்றிவேலப்பர், பூம்பாறை குழந்தை வேலப்பர். பண்ணைக்காடு சுப்பிரமணியசாமி மற்றும் மயான காளியம்மன், கானல் காடு பூதநாச்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் விசேஷ வைபங்கள் நடந்தன. தீபத்திருநாளை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இங்குள்ள முருகன் கோயில்களில் மாலை சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றப்பட்டது.