பதிவு செய்த நாள்
11
டிச
2022
12:12
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், ஏரிக்கரை மூலையில் உள்ள பழமையான கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலகலச பிம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
திருக்கோவிலூர், ஏரிக்கரை மூலையில் பழமை வாய்ந்த கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இவை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம், மூலவர் அம்மன் விமான கலசம் உள்ளிட்டவை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வந்த் நாராயண பூஜை, மூன்றாம் கால பூஜைகள், மூலமந்திர ஹோமங்கள், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.