மகா மேரு சக்ர பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2022 07:12
சென்னை : மகா மேரு ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் கோயிலில் 17ம் ஆண்டு கார்த்திகை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை செனாய் நகர் பகுதியில் அமைந்துள்ள மகா மேரு ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் ஆலயம் 17 ஆம் ஆண்டு கார்த்திகை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பகவதி அருள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி குருசாமி தலைமையில் அம்பாளுக்கு கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி மற்றும் கருட தரிசன பூஜை நடைபெற்றது. பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்பாளின் தேர் பவனி நடைபெற்றது, தேர் பவனின் போது 500 -கும் மேற்பட்ட பக்தர்கள் வழிநெடுங்கிலும் பொங்கலிட்டு அம்பாளுக்கு நேர்த்தி செய்தனர். இக்கோவில் சிறப்பான குருதி அபிஷேகம் மற்றும் மேலும் பல சிறப்பு அபிஷேகம் அம்பாளுக்கு செய்யப்பட்டது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த சிறப்பு பூஜையினை காண பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.