பதிவு செய்த நாள்
13
டிச
2022
02:12
சூலூர்: குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த, ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய ஊஞ்சல் உற்சவத்தில், கனி வகைகள், இனிப்பு, கார வகைகள் மற்றும் மங்கல பொருட்களை, சீர் வரிசைகளாக பெண்கள் கொண்டு வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாகாளியம்மன் உற்சவ மூர்த்திகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. பெண்கள் அம்மன் பாடல்களை பாடினர். தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. திருப்பூர், மேட்டுப்பாளையம், சோமனூர், பொள்ளாச்சி, சிறுமுகை, பல்லடம், அவிநாசி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.