திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கெங்கை அம்மன் கோவில் மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர், ஏரிக்கரை மூலையில் பழமையான கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இது புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அதிகாலை 5:00 மணிக்கு கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வந்த் நாராயண பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், மூலமந்திர ஹோமங்கள், மஹாபூர்ணாகுதி, யாத்ரா தானம், மேளதாளம் முழங்க கடம் புறப்பாடாகி விமான கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு வான வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.