சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு பல மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2022 03:12
சபரிமலை: சபரிமலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தால் சமாளிக்க முடியாது என போலீஸ் கூறியதை தொடர்ந்து தினமும் 90 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை செல்ல நேற்று ஒரு லட்சத்து 19 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதுதவிர பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனத்துக்காக வந்திருந்தனர். கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்காரணமாக ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 1.30 மணிக்கு சாத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. இதையடுத்து சபரிமலை நடை ஒரு நாள் 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள து. நிமிடத்துக்கு 70 பேர் இதற்கிடையே நேற்று முன்தினம் அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் சன்னிதானத்தில் போலீசார் திக்குமுக்காடி விட்டனர். பதினெட்டாம் படியில் பக்தர்களை வேகமாக ஏற்றிவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கூட்டத்தை சமாளிக்கும் விதமாக அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சன்னிதானத்துக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பம்பா பகுதியில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி., சுதர்சன் சன்னிதான பாதுகாப்பு பொறுப்புக்கு மாற்றப்பட்டு உள்ளார். சன்னிதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி., ஹரிசந்திரன் பம்பாவுக்கு மாற்றப்பட்டார். இனி ஒரு நிமிடத்துக்கு 70 பேரை பதினெட்டாம் படியில் ஏற்றிவிடும்படி ந டவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு விளக்கம் இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு உள்ள ந டவடிக்கைகள் குறித்து கேரளா ஐகோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. கேரள அரசும், தேவசம்போர்டும் நேற்று கோர்ட்டில் கூறியுள்ளதாவது:– பதினெட்டாம் படியில் புதிதாக நூறு ஐ.ஆர்.பி. அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை கூடுதலாக 420 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சந்திரானந்தன் சாலை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. மரக்கூட்டம் பாதை வழியாக பக்தர்கள் சன்னிதானத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மரக்கூட்டம் பாதையை ஒன்வே ஆக மாற்றவில்லை. நிலக்கல்லில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளது. அதே சமயம் அரசு நாளை (இன்று) நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தின் முடிவை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலக்கல்லில் தேவையான பார்க்கிங் வசதி செய்யாமல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஒரு பக்தருக்கு ஏற்படக்கூடாது எனவும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இந்த அமர்வு நாளையும் தொடரும் என கோர்ட் தெரிவித்துள்ளது.