பதிவு செய்த நாள்
14
டிச
2022
10:12
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் ஸ்ரீ ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டி, வரும், 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில், குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, ஜன., 2ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவின், ஒரு நிகழ்வாக, கோத்தகிரி பேரகணி கிராமத்தில், வரும் 14ம் தேதி (புதன் கிழமை) பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவுக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக, ஜன., 21ம் தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் பணி நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.