திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியிலுள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. திருக்கோவிலூர், மார்க்கெட் வீதி, ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று துவங்கியது. காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏந்தி வீதியுலா வந்தனர். இரவு 8:00 மணிக்கு சரண கோஷம் முழங்க மகா தீப ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8:00 மணிக்கு தென்பெண்ணையிலிருந்து தீர்த்த கலசங்கள் புறப்பட்டு, சன்னதியை வந்தடைந்து. கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சாஸ்தா ஹோமம், விசேஷ திரவியாஹூதி, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் முன் நின்று செய்து வருகின்றனர்.