வடுகநாத சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2022 02:12
பல்லடம்: பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமத்தில், வடுகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக உள்ள கால பைரவர், வடுகநாத சுவாமியாக அருள் பாலிக்கிறார். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, பக்தர்கள் பூசணிக்காய் மற்றும் நெய் விளக்கு, எலுமிச்சை தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். பல்வேறு திரவியங்களால் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.